மாவட்டம் பற்றி
தமிழ்நாட்டில் மிக அதிக பக்தர்கள் வருகைதரும கோயில்களில் திருவண்ணாமலையும் ஒன்று. பண்டைய காலத்தில் அண்ணாமலை என்பது அடையமுடியாத மலை என்று பொருள்கொள்ளத்தக்கதாய் இருந்தது. பின்பு இம்மலையின் புனிதத்தன்மையினால் இப்பெயருடன் “திரு” என்ற அடை மொழி முன்னொட்டாக சேர்த்து திருவண்ணாமலை என்று வழங்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய மற்றும் பாரம்பரியமான ஆன்மீகத் சைவத்தலமாக திருவண்ணாமலை விளங்குகிறது. அண்ணாமலை மலையும் அதன் மலைவலமும் தமிழர்களால் மிகவும் வணங்கப்பட்டு வருகிறது. கட்டக்கலையிலும், பெருவிழாக்களினாலும் திருவண்ணாமலை கோயில் மிகப் புகழ்பெற்றுள்ளது. ஆண்டு தோறும் நடக்கும் தீபத்திருவிழா தமிழகம் மட்டுமல்லாது தென்னிந்தியாவில் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகை புரிகின்றனர். இவை தவிர்த்து ஆரணி, தேவிகாபுரம், வந்தவாசி போன்ற பகுதிகள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் முக்கிய கேந்திரமாக விளங்கி வந்துள்ளது. சோழர்களின் கீழ் குறுநில மன்னராக விளங்கிய சம்புவராயர்கள் பின்பு படைவீட்டை தலைமையிடமாகக் கொண்டு தனிஅரசாட்சி அமைத்து ஆண்டுவந்துள்ளார். ஆரணியின் உள்ள கோட்டை கைலாசநாதர் கோயிலும் கோட்டை பகுதிகளும் அதற்கு சாட்சியாக விளங்குகின்றன.