மூடு

மின் மாவட்ட திட்டம்

மின்ஆளுமை

அரசு சேவைகள், தகவல் பரிமாற்றம், பல்வேறு துறைசார் பணிகளை ஒருங்கிணைத்து மக்கள் சேவைக்கும் அரசு நிர்வாகத்திற்கு தகவல் மற்றும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் ஓர் திட்டமாகும்.

தேசிய மின்ஆளுமைத்திட்டம்

தேசிய மின்ஆளுமைத்திட்டம் என்பது அனைத்து துறை அரசு சேவைகளும் இந்திய குடிமக்களுக்கும் மின்ஆளுமைத்திட்டத்தின் கீழ் வழங்க இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும்.

இந்தியாவில் மின்ஆளுமை பயன்பாட்டை அதிகப்படுத்தவும் அதன்செயல்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக தேசிய மின்ஆளுமைத்திட்டம் 2003 – 2007  இல் தோற்றுவிக்கப்பட்டது. இத்திட்டம் முறையான நிர்வாகத்தையும் அதற்கான தொழில்நுட்ப அமைப்புகளையும் செயல்படுத்த தேவையான அடிப்படை வசதிகள், விதிகள் மற்றும் கொள்கைகளை உருவாக்கி மத்திய அரசு, மாநில அரசுகளின் துறைவாரியான மின் ஆளுமைத்திட்டங்களை  உருவாக்கி மக்கள் சேவைக்கும் வணிக நடைமுறைகளுக்கும் மின் ஆளுமைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

தேசிய மின்ஆளுமைத்திட்டத்தின் நோக்கம்

அனைத்து அரசின் சேவைகளும் ஒளிவுமறைவின்றி, விரைவாகவும், நம்பகத்தன்மையுடனும் பொதுமக்களுக்கு அவர்கள் வசிக்கும் இடங்களிலேயே அளிப்பதாகும்.

மாவட்ட மின்ஆளுமைத்திட்டம்.

தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அரசாணை எண் 22, நாள்     /2010 ன்படி மாநில அரசின் வழிகாட்டுதலின் படி மாவட்ட மின் ஆளுமைத்திட்டம் 06/12/2012 அன்று மாவட்ட ஆட்சித்தலைவரை மின்ஆளுமைச்சங்கத்தின் தலைவராகவும், இதர மாவட்ட அலுவலர்களை உறுப்பினராகவும் கொண்டு தொடங்கப்பட்டது.  மாவட்ட மின் ஆளுமைத்திட்டத்தின் கீழ் 5/1/2013 அன்று வருவாய்த்துறை சான்றுகளும் 7/2/2013 சமூக நலத்துறை சேவைகளும் மின்ஆளுமைத்திட்டத்தில் முதன்முதலில் வழங்கப்பட்டன. பின்னர் படிப்படியாக அனைத்துறைகளின் சேவைகளும் மின்ஆளுமைத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு அரசின் சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

பொது சேவை மையம், திருவண்ணாமலை
வ.எண் சேவை மைய முகவர் பெயர் எண்ணிக்கை கவுண்டர் எண்ணிக்கை
1 தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. 15 30
2 தொடக்க வேளாண்மைகூட்டுறவு கடன் சங்கம் 162 162
3 மகளிர் திட்டம் 207 207
4 கிராம தொழில்முனைவோர் 165 165
மொத்தம் 549 564

மக்கள் பொதுசேவை மையங்கள்

மின்னாளுமை மாவட்ட சேவைகள்:

  1. சாதிச்சான்றிதழ்
  2. இருப்பிட சான்றிதழ் (5 அல்லது மேற்பட்ட வருடங்களுக்கு) /

குடியிருப்பு சான்றிதழ்(3 அல்லது அதற்கு கீழுள்ள வருடங்களுக்கு)

  1. வருமானச் சான்றிதழ்
  2. முதல் பட்டதாரி சான்றிதழ்
  3. கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் சான்றிதழ்

மின்னாளுமை மாவட்ட சமூக நலத்துறைசேவைகள்:

  • மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம்
  • அன்னை தெரசா அம்மையார் நினைவு அனாதை பெண் திருமண உதவி திட்டம்
  • ஈவேரா மணியம்மை நினைவுவிதவை மகள் திருமண உதவி திட்டம்
  • தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவி திட்டம்
  • டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம்
  • பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் -I
  • பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் – II

இணைய வழி பட்டா மாறுதல்:

  • தமிழ்நிலம்– உட்பிரிவுகளுடன் கூடியது (ஊரகம்)
  • தமிழ்நிலம்– உட்பிரிவுகள் இல்லாதது  (ஊரகம்)
  • தமிழ்நிலம்– கூட்டு பட்டா மாறுதல் (ஊரகம்)
  • தமிழ்நிலம்– உட்பிரிவுகளுடன் கூடியது (நகர்புறம்)
  • தமிழ்நிலம்– உட்பிரிவுகள் இல்லாதது (நகர்புறம்)

மின்னாளுமை மாவட்ட சேவைகள் –சேவை கட்டணம்

  1. வருவாய்த்துறை சான்றிதழ்கள்- ரூ 60
  2. சமூக நலத்துறை திட்டங்கள் -ரூ 120
  3. இணைய வழி பட்டா மாறுதல் -ரூ 60

இ-சேவை

இ-சேவை திட்டத்தில் வழங்கப்படும் சேவைகள்
வ.எண் துறை துறை கட்டணங்கள் சேவை கட்டணம்
1. மின்சார வாரியம் மின் உபயோக கட்டணம் 1000வரை

1001 – 3000

3001 – 5000

5001 – 10000

10000 மேல்

15

25

40

50

60

 

2 பொது வினியோகத்திட்டம் புதிய குடும்ப அட்டை

குடும்ப அட்டை திருத்தம்

குடும்ப அட்டை அச்சிட

0

 

 

0

 

 

0

60

 

 

60

 

 

60

3 தா.நா.இ.சே தமிழ்நாடு பொறியியல் சேர்கை பொது.ரூ500

பி.வ-தா.வ – தா.ப –ரூ250

60

 

 

60

4 தீயனைப்பு துறை தடையின்மை சான்றிதழ் – பல மாடி குடியிருப்பு திட்ட அனுமதி

தடையின்மை சான்றிதழ் –குடியிருப்பு திட்ட அனுமதி

பல மாடி குடியிருப்பு-தீ அனுமதி- பதிவு மற்றும் புதுப்பித்தல்

தீ அனுமதி- பதிவு மற்றும் புதுப்பித்தல்

0

 

 

 

0

 

 

 

0

 

 

0

120

 

 

 

120

 

 

 

120

 

 

 

120

 

முக்கிய இணைப்புகள் :

பொது சேவை மையங்கள்:

அலுவலர்கள் பயண்பாடு: