Training for Micro observers 13-04-2026
Publish Date : 16/04/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (13.04.2026) திருவண்ணாமலை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் தேர்தல் பொது பார்வையாளர்களான திரு.அபிஷேக் கிருஷ்ணா, இ.ஆ.ப., (செங்கம், கலசப்பாக்கம்), திரு.ரவிக்குமார் சர்பூர், இ.ஆ.ப., (திருவண்ணாமலை, கீழ்பென்னாத்துார்), திரு.சதேந்திர சிங், இ.ஆ.ப., (போளூர், ஆரணி), திரு.ராமகிருஷ்ணா சித்துாரி, இ.ஆ.ப., (செய்யார், வந்தவாசி) ஆகியோர் தலைமையில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் நுண் பார்வையாளர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.