ஊடக வெளியீடுகள்
விக்சித் பாரத் (VBYLD) 2027 மாவட்ட ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 16/09/2026திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (11.09.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விக்சித் பாரத் (VBYLD) 2027 நிகழ்வை சிறப்பாக செயல்படுத்துவது மற்றும் மாவட்ட ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
டாக்டா். இராதாகிருஷ்ணன் விருது 2026
வெளியிடப்பட்ட நாள்: 16/09/2026பள்ளிக்கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் ஆசிாியர்களில் சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியா்களுக்கு தமிழ்நாடு அரசு மூலம் ஆசிரியா் தினத்தன்று ஆண்டுதோறும் டாக்டா். இராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டு வருகிறது. 2026 ஆம் ஆண்டிற்கான டாக்டா். இராதாகிருஷ்ணன் விருது திருவண்ணாமலை மாவட்டத்தில் 13 ஆசிரியா்கள் தேர்வாகி விருது பெற்றனா். இவ்விருது பெற்ற ஆசிரியா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இன்று (10.09.2026) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவா் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப., அவா்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
மாவட்ட ஆட்சித்தலைவா் அவா்கள் தலைமையில் ஊட்டச்சத்து குறைபாடிற்கு எதிரான உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனா்
வெளியிடப்பட்ட நாள்: 16/09/2026திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவா் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப., அவா்கள் தலைமையில் இன்று (09.09.2026) தண்டராம்பட்டு, தேனம்மை பழனியப்பன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் ஊட்டச்சத்து குறைபாடிற்கு எதிரான உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனா்
மாவட்ட ஆட்சித்தலைவா் மக்கள் தொடா்பு திட்ட முகாமைக் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தாா்
வெளியிடப்பட்ட நாள்: 16/09/2026திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவா் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப., அவா்கள் இன்று (09.09.2026) தண்டராம்பட்டு, தேனம்மை பழனியப்பன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமைக் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தாா்.
மக்கள் குறைதீா்வு நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 31/08/2026மக்கள் குறைதீா்வு நாள் கூட்டம்
மக்கள் குறைதீா்வு நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (24.08.2026) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டாா்.
மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு குழு கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 20/08/2026திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (18.08.2026) மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலம் நடத்தப்பட்ட மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
கிராம சபை கூட்டம் கொளக்குடி ஊராட்சி
வெளியிடப்பட்ட நாள்: 20/08/2026திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.08.2026) திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொளக்குடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் – 2026
வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.08.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் 80 – வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ண கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
உங்களைத் தேடி உங்கள் ஊாில் ஆய்வு 12-08-2026
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2026திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (12.08.2026) உங்களைத் தேடி உங்கள் ஊாில் திட்டத்தின் கீழ் போளுா் வட்டத்திற்குட்பட்ட காங்கேயனூா் ஊராட்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணியை ஆய்வு மேற்கொண்டார்.