ஊடக வெளியீடுகள்

Filter by:
palm

பனைவிதை நடும் நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட நாள்: 15/10/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.10.2026) திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட ஆடையூர் ஏரியில் மாநகராட்சி மற்றும் சேவ் ஹியூமானிட்டி சார்பில் பனைவிதை நடும் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்

CM Trophy.

முதலமைச்சர் கோப்பை 2026

வெளியிடப்பட்ட நாள்: 15/10/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.10.2026) மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான முதலமைச்சர் கோப்பை 2026 -க்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளைத் துவக்கி வைத்து வீரர்,வீராங்கனைகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் போளுா் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.அபிஷேக் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

National Nutrition

9வது தேசிய ஊட்டச்சத்து மாதம்

வெளியிடப்பட்ட நாள்: 09/10/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் (08.10.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் 9வது தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற நமது அங்கன்வாடி நமது பொறுப்பு பிரச்சாரம் நிகழ்ச்சியைக் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

Sports.

மாவட்ட அளவிலான தடகள போட்டி

வெளியிடப்பட்ட நாள்: 09/10/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (07.10.2026) மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் திருவண்ணாமலை வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டிகளைத் துவக்கி வைத்தார்.

gdp.

மக்கள் குறைதீர்வு நாள்

வெளியிடப்பட்ட நாள்: 09/10/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (05.10.2026) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

Grama Sabha meeting held today (02.10.2026) at Konalur Panchayat, under Kilpennathur Panchayat Union

காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோணலூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 03/10/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (02.10.2026) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோணலூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தில் போதைப்பழக்கதிற்கு எதிரான உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

Thaimaaman Thanga Mothiram scheme.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 28/09/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தைத் தொடங்கி வைத்த நிகழ்ச்சியை நேரலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப. அவர்களும், போளுா் சட்டமன்ற உறுப்பினா் திரு.ஆர்.அபிஷேக் அவர்களும் , துறை சார்ந்த அலுவலர்களும் பார்வையிட்டனர்.

diwali sale.

கோ – ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி – 2026 சிறப்பு தள்ளுபடி விற்பனை

வெளியிடப்பட்ட நாள்: 28/09/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப., அவர்கள் (28.09.2026) இன்று திருவண்ணாமலை காமாட்சி அம்மன் கோவில் அருகில் உள்ள கோ – ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி – 2026 சிறப்பு தள்ளுபடி விற்பனையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.

Award.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவா் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவா் திருமதி வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள்

வெளியிடப்பட்ட நாள்: 23/09/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவா் திருமதி வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (22.09.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மக்கள் குறைதீர்வு நாள் கூட்டரங்கில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அளித்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவா் திருமதி வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள்.

Sensitization.

முதியோா் நலன் மற்றும் உாிமைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட நாள்: 17/09/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (17.09.2026) மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் முதியோா் நலன் மற்றும் உாிமைகள் (Sensitization and Awareness Programme) குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.