மாவட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கைகள், வளர்ச்சிப் பணிகள், சட்டம் ஒழுங்கு பராமரித்தல், அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட முக்கியப் பணிகளை கவனிப்பது மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் ஆகும். மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இந்திய ஆட்சிப்பணி அந்தஸ்தில் உள்ள ஒருவர் மாவட்ட ஆட்சித்தலைவராக இருப்பார். இவர் மாவட்டத்தின் முக்கிய திட்டமிடுதல், வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு, படைக்கலச்சட்டம் போன்றவற்றை நேரடியாக கண்காணிப்பார். கூடுதல்மாவட்ட ஆட்சியராக மாவட்ட வருவாய் அலுவலர் செயல்படுவார், இவர் குடிமைப்பொருள், நிலம் தொடர்பான பணிகள், கனிமம், கிராமநிர்வாகம் பிறப்பு இறப்பு ஆகியவற்றை கண்காணிக்கிறார். மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் துணை ஆட்சியர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் உறுதுணையாக செயல்பட்டு மாவட்ட நிர்வாகத்தை வழிநடத்துகின்றனர். தவிர திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை), உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்), நகராட்சி ஆணையர்கள், நேர்முக உதவியாளர்கள் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு உறுதுணையாக இருந்து மாவட்ட நிர்வாகத்தை திறம் பட நடத்துகின்றனர்.
- பிரிவு எ – பணியாளர் தொகுதி, அலுவலக நடைமுறைகள், பொதுத்தேர்தல் மற்றும் முக்கிய அதிகாரிகளின் தங்கல் மற்றும் பயண ஏற்பாடுகள்
- பிரிவு பி – நிலம் கையகப்படுத்துதல் மற்றும் அது தொடர்பான வழக்குகள் கையாளுதல்
- பிரிவு சி – சட்டம் ஒழுங்கு, நீதியியல் – வழக்குகள்
- பிரிவு டி – பதிவறை பாதுகாப்பு, அரசு அழுவலக இருப்பிட வசதி, மாவட்ட அரசிதழ், அரசு தேர்வுகள்
- பிரிவு இ – மறுவாழ்வு, அகதிகள் நலம், இலங்கை தமிழர்கள் நலம்
- பிரிவு எஃப் – வரவு செலவு, தனிக்கை,சம்பளம்
- பிரிவு ஜி – மின்ஆளூமை
- பிரிவு எச் – பொது மக்கள் குறைதீர் பிரவு
- பிரிவு ஐ – உழவர்பாதுகாப்பு திட்டம் , RTI
- பிரிவு ஜெ – குடிமை பொருட்கள் பொது வினியோகம்
- பிரிவு கே – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்
- பிரிவு எம் – நிலம் – நில ஆக்கிரமிப்பு – நிலம் – பட்டா மாறுதல்
- பிரிவு என் – நில விடுவிப்பு – இரயில்வே நிலங்கள்
- பிரிவு டபில்யு – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
- கலால் – மது விலக்கு- டாஸ்மாக்
- PA(PD) : வளர்ச்சி பணி
- AD(P) : கிராம பஞ்சாயத்துகள்
- AD(audit) : தனிக்கை மற்றும் உயர்மட்ட குழு
- PA(SS) : சிறு சேமிப்பு
- PA(NM) : பள்ளி சத்துணவு திட்டம்
- PO(DRDA) : ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்
- A.D(TP) : பேரூராட்சிகள் நிர்வாகம்
- A.D(Mines) : சுரங்கம் மற்றும் கனிம்வளம்