கல்வித்துறை
கல்வி என்பது மனிதனை அனைத்து உயிரினங்களைவிட உயா்வான நிலையில் உருவாக்கும் கருவி ஆகும். கல்வி ஒரு சமூகத்தின் ஒருங்கிணைந்த அறிவு, திறன் மற்றும் மதிப்பீடுகளை ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு கொண்டு செல்ல உதவும் ஒரு காரணி, கல்வி குழந்தைகளை சுயமாக சிந்திக்கவும், புதியனவற்றை உருவாக்கவும், கற்பனைத் திறனை வளா்க்கவும், கலைநயம் மிக்க சிந்தனைத் திறனை உருவாக்கும் அற்புதக் கருவி ஆகும்.
ஒரு குழந்தையின் படைப்புத் திறனை உருவாக்குவதற்கும், அழகியலை ஆராதிப்பதற்கும் வழிகளையும், வாய்ப்புகளையும் வழங்கும். கல்வி நம்மைச் சுற்றி இருக்கக் கூடிய உலகத்தைப் பற்றிய உலகளாவிய அறிவை வழங்குகிறது. குழந்தைகளுக்கு செயல்பாடுகள் குறித்த சரியான புரிதல்களை கலவி வழங்குகிறது.
இலக்கு:
கல்வியானது கழந்தைகளின் சிந்தனைத் திறனை மேம்படுத்தி, செயல்பாடுகளில் சரியான முடிவைத் தோ்வு செய்யக் கூடிய வகையில் அமைய வேண்டும். மேலும், உலகளவிலான அறிவு பள்ளிக் குழந்தைகளுக்கு, தொடக்க மற்றும் இடைநிலையில் சுகமாகவும், தரமானதாகவும் சுமையில்லாத இனிமையான அடிப்படை வசதிகளுடன் பாதுகாப்பான முறையில் சென்றடைய வேண்டும்.
நோக்கம் :
- குழந்தைகளுக்கு தொடக்கக் கல்வி, இடைநிலைக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வியானது தரமானதாகவும், அனைவருக்கும் சமமானதாகவும் உலக அளவில் தேடிப் பெறும் வாய்ப்பை வழங்க வேண்டும்.
- இந்திய அரசியலமைப்பின்படி அனைத்து உரிமைகளும் பெறும் வகையிலும். குழந்தைகளின் சிந்தனைத்திறன், படைப்பாற்றலை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பினை உருவாக்கும் வகையிலும் மேம்படுத்தப்பட்ட பாடத் திட்டம், மதீப்பீட்டு முறை அமைதல் வேண்டும்.
- குழந்தைகள், அறிவு தங்களின் உள்ளார்ந்த அறிவாற்றல் மற்றும் உடல், மனம் ஆகியனை முழுமையான வளா்ச்சி பெறும் வகையில் கல்வி வழங்க வேண்டும்.
- ஒவ்வொரு குழந்தைக்கும் அடிப்படை வசதிகள், கட்டமைப்பு வசிதகள் வழங்குவதோடு, குழந்தைகள் கற்கும் சூழல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் புதிதாக கண்டுபிடிக்கும் திறனை வெளிக் கொணரும் வகையில் கல்வி அமைதல் வேண்டும்.
- குழந்தைகளின் படைப்பாற்றலை வளா்க்கும் வகையில் அவா்களின் தாய் மொழியில் கல்வி வழங்குதல் வேண்டும்.
- குழந்தைகள் தங்களின் கருத்துகளை அச்சமின்றி வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு வாய்ப்புகளை வழங்கும் வகையில் கல்வி அமைய வேண்டும். ஒரு குழந்தையின் அறிவு, தனித் திறன் மற்றும் குழந்தையின் உடல்நலன் மற்றும் மனநலனை முழுமையான முறையில் மேம்படுத்தும் வகையில் அமைதல் வேண்டும்.
- குழந்தைகளுக்கு இறுதித் தோ்வானது அதிக நெகிழ்வுத் தன்மை மற்றும் வகுப்பறை சூழல் ஒருங்கிணைந்த தொடா் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையிலும், வளா்ச்சிப்படி நிலையில் எதிர்கால கனவுகள் மற்றும் இலக்குகளை அச்சமின்றி அடையும் வகையில் கல்வி அமைதல் வேண்டும்.
வ.எண் | அலுவலரின் பதவி | அலுவலக தொலைபேசி எண் | மின்னஞ்சல் |
---|---|---|---|
1 | முதன்மை கல்வி அலுவலர் | 04175-224379 | ceotvm[at]nic[dot]in |
2 | மாவட்ட கல்வி அலுவலர், திருவண்ணாமலை | 04175-224900 | deotvm[at]nic[dot]in |
3 | மாவட்ட கல்வி அலுவலர், போளூர் | 04181-222299 | deopolur@gmail.com |
4 | மாவட்ட கல்வி அலுவலர், செங்கம் | 04188-223182 | deochengam@gmail.com |
5 | மாவட்ட கல்வி அலுவலர், ஆரணி | 04173-222272 | deoarni2018@gmail.com |
6 | மாவட்ட கல்வி அலுவலர், செய்யார் | 04182-220431 | deochr[at]nic[dot]in |