மூடு

கோவில்

ஆன்மிகத்திலும் வரலாற்றிலும் புகழ்பெற்ற இடமாக திகழ்கிறது திருவண்ணாமலை. பஞ்சபூத்த்தலங்களில் ஒன்றாகவும் சைவக்குரவர்களால் பாடல் பெற்றத்தலமாகவும் சிறப்புபெற்ற திருக்கோயில்.  இங்குள்ள அண்ணாமலையார் கோயில் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு தொடர்ந்து சோழர்கள், பாண்டியர்கள், சம்புவராயர்கள், போசளர்கள், விஜயநகர அரசர்கள், நாயக்க மன்னர்கள், நகரத்தார்கள், குறுநில மன்னர்கள், ஐமின்தார்கள் என பல்வேறு அரசர்களின் பங்களிப்பு இக்கோயில் கட்டடக்கலை வரலாற்றில் உள்ளன. இக்கோயிலில் ஆயிரக்கணக்கான சிற்பங்களும், 450 கல்வெட்டுகளும் உள்ளன.  இக்கோயிலில் 100 க்கும் மேற்பட்ட சந்நிதிகள் உள்ளன. இறைஉருவங்கள், செப்புத்திருமேனிகள், ஓவியங்கள், அழகிய திருச்சுற்றுகள், தீர்த்தக்குளங்கள், ஆயிரக்கால் மண்டபம், வானுயர்ந்த கோபுரங்கள் இக்கோயிலின் சிறப்புகள் ஆகும். 25 ஏக்கர் பரப்பளவில் மிகப்பிரமாண்டமாய் அமைந்துள்ளது இத்திருக்கோயில். கிருஷ்ணதேவராயர் கட்டிய கிழக்கு ராஜகோபுரம் 217 அடி உயரம், தமிழ்நாட்டில் இரண்டாவது உயரமான கோபுரம் ஆகும். இவை தவிர வல்லாள மகாராஜா கோபுரம், கிளிக்கோபுரம் ஆகியன சரித்திரம், அம்மனிஅம்மன் கோபுரம் ஆகியன முக்கியத்துவம் வாய்ந்த கோபுரங்களாகும். இக்கோயிலில் அருள்மிகு அண்ணாமலையார் உடனமர் உண்ணாமுலை மூலவராக அமைந்துள்ளனர். மலைவலப்பாதையில் அமைந்துள்ள எழுத்து மண்டபம் ஓவிய கூடமாக திகழ்கிறது. இவை தவிர கந்தாஸ்ரமம், பவழக்குன்று, ரமணாஸ்ரமம், கிரிவலப்பாதை, அஷ்டலிங்கங்கள் பார்க்கத்தகுந்த இடங்களாகும்.

புகைப்பட தொகுப்பு

  • கோவில் மற்றும் மலை காட்சி
  • கோவில் விளக்கு அலங்காரம்
  • தேர்

அடைவது எப்படி:

வான் வழியாக

சென்னை விமான நிலையத்திலிருந்து 189 கிமி திருவண்ணாமலை கோவில் அமைந்துள்ளது.

தொடர்வண்டி வழியாக

சென்னையிலிருந்து வேலூர் சென்று திருவண்ணாமலை கோவில் வந்தடையலாம். மிக விரைவி சென்னை-திருவண்ணாமலை இரயில் மார்க்கம் அமைய உள்ளது.

சாலை வழியாக

சென்னை பேருந்து நிலையத்திலிருந்து 195 கிமி தூரம் சாலை வழியாக திருவண்ணாமலை கோவிலுக்கு வந்தடையலாம்.