மூடு

மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை குழுக்கூட்டம் 20-06-2026

வெளியிடப்பட்ட தேதி : 22/06/2026
DISHA.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (20.06.2026) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பாக மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை குழுக்கூட்டம் (DISHA) மாவட்ட ஆட்சித்தலைவர் / உறுப்பினர் செயலாளர் திருமதி.வந்தனா கார்க் இஆப., அவர்கள் முன்னிலையில், ஊரக வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை குழு தலைவர் / ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எம்.எஸ்.தரணிவேந்தன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர் / திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (கலசபாக்கம்), திரு.எஸ்.அம்பேத்குமார் (வந்தவாசி), திரு.ஆர்.அபிஷேக் (போளூர்), திரு.எஸ்.வேலு(செங்கம்) மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.