மூடு

சமூக நலத்துறை

சமூக நலத்துறை பின்வரும் திட்டங்களை செயல்படுத்திவருகிறது

  1. மூவலூா் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம்
  2. ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம்
  3. அண்ணை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவி திட்டம்
  4. டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம்
  5. டாக்கடா் தா்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணம் நிதியுதவித் திட்டம்
  6. முதலமைச்சரின் பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டம்
  7. சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டம்

1. மூவலூா் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம்:

பயன் மதிப்பு :

  • ரூ. 25,000/- + 8 கிராம் தங்கம் – மணமகள் பத்தாம் வகுப்பு இறுதி தோ்வு எழுதியிருக்க வேண்டும்.
  • ரூ. 50,000/- + 8 கிராம் தங்கம் – மணமகள் பட்டப் படிப்பு/பட்டயப் படிப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்

பயனாளி : மணமகளின் பெற்றோர் தகுதிகள் :

  • 18 வயது பூா்த்தி அடைந்திருக்க வேண்டும்.
  • குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000/-க்குள் இருத்தல் வேண்டும்.
  • திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னா் விண்ணபிக்க வேண்டும்.

2. ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம்:

பயன் மதிப்பு :

  • ரூ. 25,000/- + 8 கிராம் தங்கம் – மணமகள் பத்தாம் வகுப்பிற்கு கீழ் பழத்திருந்தால் போதுமானது.
  • ரூ. 50,000/- + 8 கிராம் தங்கம் – பட்டப்படிப்பு/பட்டயப் படிப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பயனாளி: விதவை தாயார்

தகுதிகள் :

  • 18 வயது பூா்த்தி அடைந்திருக்க வேண்டும்
  • குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000/-க்குள் இருத்தல் வேண்டும்.
  • திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னா் விண்ணபிக்க வேண்டும்.

3. அண்ணை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவி திட்டம்
பயன் மதிப்பு

  • ரூ. 25,000/- + 8 கிராம் தங்கம் – மணமகள் பத்தாம் வகுப்பிற்கு கீழ் படித்திருந்தால் போதுமானது.
  • ரூ. 50,000/- + 8 கிராம் தங்கம் – மணமகள் பட்டப்படிப்பு/பட்டயப் படிப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பயனாளி : தாய், தந்தை இல்லாத ஆதரவற்ற பெண்.தகுதிகள் :

  • 18 வயது பூா்த்தி அடைந்திருக்க வேண்டும்.
  • குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்குள் இருத்தல் வேண்டும்
  • திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னா் விண்ணபிக்க வேண்டும்.
  • தாய், தந்தை இறப்பு சான்று சமா்பிக்க வேண்டும்.

4. டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம் :

பயன் மதிப்பு :

  • ரூ. 25,000/- + 8 கிராம் தங்கம் – மணமகள் பத்தாம் வகுப்பிற்கு கீழ் படித்திருந்தால் போதுமானது (ரூ. 15,000/- காசோலை & ரூ. 10,000/- தேசிய சேமிப்பு பத்திரம்)
  • ரூ. 50,000/- + 8 கிராம் தங்கம் -மணமகள் பட்டப்படிப்பு/பட்டயப்படிப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும் (ரூ. 20,000/- காசோலை & ரூ. 30,000/- தேசிய சேமிப்பு பத்திரம்)

பயனாளி : கலப்புத் திருமண தம்பதியா்.

தகுதிகள் :

  • 18 வயது பூா்த்தி அடைந்திருக்க வேண்டும்.
  • திருமண வகை கீழ்கண்டவாறு இருத்தல் வேண்டும் FC- BC,SC/ST- BC, SC/ST-FC
  • குடும்ப ஆண்டு வருமானம் உச்சவரம்பு இல்லை.
  • திருமண நாளிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் மனு செய்ய வேண்டும்.
  • வயது வரம்பு இல்லை.

5. டாக்கடா் தா்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணம் நிதியுதவித் திட்டம் :

பயன் மதிப்பு :

  • ரூ. 25,000/- + 8 கிராம் தங்கம் – மணமகள் பத்தாம் வகுப்பிற்கு கீழ் படித்திருந்தால் போதுமானது. (ரூ. 15,000/- காசோலை, ரூ. 10,000/- தேசிய சேமிப்பு பத்திரம்)
  • ரூ. 50,000/- + 8 கிராம் தங்கம் – மணமகள் பட்டப்படிப்பு/பட்டயப் படிப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும் (ரூ. 20,000/- காசோலை, ரூ. 30,000/- தேசிய சேமிப்பு பத்திரம்)

பயனாளி : விதவை மறுமண தம்பதியா்

தகுதிகள் :

  • குறைந்தபட்ச வயது 20 ஆக இருத்தல் வேண்டும்.
  • குடும்ப ஆண்டு வருமானம் வரம்பு இல்லை.
  • திருமணம் முடிந்து 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • விதவைச் சான்று பெற்றிருத்தல் வேண்டும்.

6. முதலமைச்சரின் பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டம் :

பயன் மதிப்பு :

  • திட்டம் I : ரூ. 50,000/-
  • திட்டம் II : ரூ. 25,000/- (01.08.2011 அன்றோ அதன் பிறகு பிறக்கும் குழந்தைகளுக்கு)

தகுதிகள் :
திட்டம் I :

  • குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்து, குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000/-க்குள் இருத்தல் வேண்டும்.

திட்டம் II :

  • குடும்பத்தில் இரு பெண் குழந்தை மட்டும் இருந்து, குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000/-க்குள் இருத்தல் வேண்டும்.

பொது :

  • ஆண்/பெண் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • ஆண் வாரிசு இருக்கக் கூடாது.
  • 2வது குழந்தை பிறந்த 3 வருடத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

7. சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டம் :

பயன் மதிப்பு : தையல் இயந்திரம்.

பயனாளி : விதவை/கணவரால் கைவிடப்பட்டோர் நலிவுற்ற ஏழைப்பெண்/மாற்றுதிறனாளி ஆண்/பெண்

தகுதிகள் :

  • 20 வயதிலிருந்து 40க்குள் இருக்க வேண்டும்.
  • குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 24,000/-க்குள் இருக்க வேண்டும்.
  • தையல் தொிந்திருக்க வேண்டும்.

மூன்றாம் பாலினத்தவருக்கு உதவி வழங்குதல்

  • அடையாள அட்டை
  • சுய தொழில் செய்ய பயிற்சி
  • 40 வயதிற்கு மேற்பட்டவா்களுக்கு ஓய்வூதியம்

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம் 2017

  • நேரடியாகவோ, தீா்ப்பாயத்தின் மூலமாகவோ பெறப்படும் பாதிக்கப்பட்டோாின் மனுக்கள் சமரச அலுவலா் (மாவட்ட சமூகநல அலுவலா்) விசாரணை செய்து தீா்ப்பாயத்திற்கு அறிக்கை அளிப்பார்
  • தன்னை பராமரித்துக் கொள்ள வாய்ப்பு இல்லதா பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் இச்சட்டத்தின் கீழ் நீதி மன்றத்திற்கு செல்ல வேண்டியது இல்லை. ஒவ்வொரு கோட்டாட்சியா் தலைமையிலும் தீா்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவா் தலைமையிலும் மேல்முறையீட்டு தீா்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.

குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் – 2006

18 வயது நிறைவடையாத பெண்ணும், 21 வயது நிரைவடையாத ஆணும் செய்யும் திருமணமே குழந்தை திருமணம் ஆகும். இது சட்டப்படி குற்றமாகும். இத்தகைய திருமணம் செய்யும் பெற்றோர்களும், உறவினா்களும், உடந்தையாக இருப்பவா்களும் தண்டனைக்கு உரியவா்கள்.

  • காவல் துறை
  • மாவட்ட சமூகநல அலுவலா்
  • நீதித் துறை
  • வட்டாட்சியா்
  • குழந்தைகள் நலம் குழுமம்
  • பஞ்சாயத்து கண்காணிப்பு குழு உறுப்பினா்கள் (ஊராட்சி தலைவா், சமூக நல விரிவாக்க அலுவலா், கிராம உதவிக் குழு செயலா், பள்ளித் தலைமையாசிாியா், பெண் வாா்டு உறுப்பினா், கிராம நிர்வாக அலுவலா்)

குழந்தைகளுக்காக 24×7 செயல்படும் அவசர உதவி எண் – 1098

அரசு சேவை இல்லம் மேல்நிலைப் பள்ளி

சமூக நலத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் அரசு சேவை இல்ல மேல் நிலைப்பள்ளியில் மாணவிகள் சோ்த்து கொள்வதற்க்கு
தகுதிகள் :

  • 14 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும்
  • விதவை மகள்
  • ஆதரவற்ற பெண்கள்
  • இல்லத்திலேயே தங்கி கல்வி பயில வேண்டும்.
  • a) மேல் நிலை படிப்பு முடிந்த பிறகு கல்லூரியில் தொடா்ந்து பயில ஆண்டிற்கு ரூ. 33,000/- வழங்கப்படுகிறது.
  • b) தொடா்ந்து சேவை இல்லத்திலேயே தங்கி ஆசிரியா் பயிற்சி, இளங்கலை பட்டப் படிப்பு படிக்கும் வசதி.

குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005.

  • உடல் ரீதியான
  • பாலியல் ரீதியான
  • பொருளாதார
  • வார்த்தை மற்றும் மன ரீதியான வன்முறையிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளித்தல்.

பெண்கள் தன்னுடைய கணவனாலோ அல்லது கணவரின் உறவினா்களாலோ ஏற்படுகின்ற கொடுமைகளுக்கு எதிராக தீா்வு மற்றும் நிவாரணம் கிடைக்க இச்சட்டம் வகை செய்கிறது.

வரதட்சனைத் தடுப்புச் சட்டம் 1961 :

திருமணத்திற்கு முன்போ (அ) பின்போ திருமணத்திற்கென்று பெண் வீட்டாரிடமிருந்து நேரடியாகவோ (அ) மறைமுகமாகவோ நிதி மற்றும் பொருள் கொடுப்பதோ (அ) கொடுப்பதாகச் சம்மதிப்பதோ வரதட்சனை ஆகும்.

மணமகள்/மணமகனின் பெற்றோர்/உறவினா்கள் வரதட்சனை கேட்டு நேரடியாகவோ (அ) மறைமுகமாகவோ வற்புறுத்துவார்களேயானால் அவா்களுக்கு 6 மாதத்திற்கு குறையாமலும் 2 வருடம் வரை நீட்டித்து சிறை தண்டனையும் ரூ. 10,000/- வரை அபராதமும் விதிக்கப்படும்.

வரதட்சனை தடுப்புச் சட்டம் பிாிவு 8 B ன் படி அரசு வரதட்சனை தடுப்பு அலுவலா்களை நியமிக்கலாம் என்பதன் பேரில் மாவட்ட சமூகநல அலுவலா்களை வரதட்சனைத் தடுப்பு அலுவலா்களாக அரசு நியமித்துள்ளது.