மூடு

ஆய்வுக் கூட்டம் 19-04-2026

வெளியிடப்பட்ட தேதி : 20/04/2026
ins

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், தேர்தல் பொது பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட திரு.ரவிகுமார் சர்பூர், இ.ஆ.ப., (திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர்), திரு.ராமகிருஷ்ணா சித்தூரி, இ.ஆ.ப., (செய்யார், வந்தவாசி) திரு.சதேந்திர சிங், இ.ஆ.ப., (போளூர், ஆரணி), ஆகியோர்கள் முன்னிலையில் இன்று (19.04.2026) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்குப்பதிவுக்கு முன்பு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தொடர்பு அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.