மூடு

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை

இந்திய மற்றும் தமிழ்நாடு அரசின் பல்வேறு வறுமை ஒழிப்பு திட்டங்களை மாவட்ட அளவில் செயல்படுத்துவதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முதன்மையான அலுவலகமாக உள்ளது. வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்துவதிலும், அதன் முக்கிய நோக்கங்களை கிராமபுற மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், ஊரக வளர்ச்சி முகமை தொழில்நுட்பத்துடன்கூடிய தனித்தன்மை வாய்ந்த நிறுவனமாக உள்ளது. கிராமங்களின் வறுமை மற்றும் பிற்பட்ட நிலையை நீக்குவதற்கு அதன் கட்டமைப்புகளை பலப்படுத்துவதிலும், பொருளாதார வளங்களை மேம்படுத்துவதிலும் உதவி செய்கிறது. கிராமபுற மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி, வறுமை ஒழிக்கும் நோக்த்துடன் பற்பல திட்டங்களை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயல்படுத்துகிறது. பொருளாத வேறுபாடுகளை களைந்து வறுமை கோட்டிற்குகீழ் உள்ள மக்களின் பொருளாதார வளர்ச்சியே இந்ததிட்டங்களின் முக்கிய நோக்கமாக உள்ளது.

இதனைத்தொடர்ந்து 1980 ஆம் வருடத்திய தமிழ்நாடு அரசின் சங்கங்கள் சட்டப்படி ஊரக வளர்ச்சி முகமை தொடங்கப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையில் செயல் பட்டு வருகிறது. இதன் முக்கிய கொள்கை முடிவுகளை எடுப்பதிலும், மற்றும் அதன் செயல்பாட்டையும் நிர்வகிக்கவும் பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட அளவிலான அலுவலர்கள், வங்கி மேலாளர், ஆகியோர் அடங்கிய ஆட்சிமன்றக்குழு காலாண்டுக்கு ஒரு முறை கூடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்தல் மற்றும் கட்டுபடுத்தி மேற்பார்வையிடும் பணியினையும் செய்கிறது. இதன் நிர்வாக செலவீனம் மத்திய, மாநில அரசுகளால், 75:25 என்ற விகிதத்தில் பிரித்து ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

திட்டங்கள்:

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பின்வரும் திட்டங்களை செயல்படுத்திவருகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்

திட்டத்தின் செயல்பாடு

 • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டமானது அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் அங்கீகாிக்கப்பட்ட ஒரு திட்டமாகும். இத்திட்டத்திற்கு மத்திய அரசு 90% மற்றும் மாநில அரசு 10% நிதியுதவி செய்கிறது.
 • 18 வயதிற்கு மேற்பட்ட வேலை செய்ய விருப்பமுள்ள நபா்களுக்கு கிராம புறங்களில் ஒவ்வொரு நிதியாண்டிற்கும் ஒரு குடும்பத்திற்கு 100 நாட்கள் வேலை வழங்கப்படுகிறது.
 • இத்திட்டத்தில் பணிபுரியும் திட்ட பணியாளா்களுக்கு e-FMS முறையில் நாள் ஒன்றுக்கு ரூ.205/-வீதம் வாராந்திர ஊதியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் கிராமப்புற பகுதிகளில் உள்ள மக்களின் வறுமையை ஒழித்து, வேலை வாய்ப்பு வழங்குகிறது.
 • இத்திட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் இயற்கை வளம் மற்றும் நீா்வள பாதுகாப்பு மற்றம் மேம்பாட்டு பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மேலும் கிராமபுறத்தை வளப்படுத்தும் பொருட்டு பஞ்சாயத்து அலுவலகம் ஊராட்சி சேவை மையம், வட்டார சேவை மையம் அங்கன்வாடி, மழையால் பாதிக்கப்படும் பள்ளிகளில் சுற்றுச்சுவா் அமைத்தல், ஆதிதிராவிடா்/பழங்குடியினா் வாழ் பகுதிகளுக்கு மெட்டல் சாலை அமைத்தல், பெருந்திரள் மற்றும் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடுதல் தடுப்பணைகள் போன்ற பணிகளை பிற துறைகளுடன் இணைந்து (தோட்டக்கலை, வேளாண்மைத்துறை, வனத்துறை மற்றும் மீன்வளத்துறையுடன்) செயல்படுத்தப்படுகிறது.
 • இத்திட்டத்தில் 3% மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு பணி வழங்கப்படுகிறது. இவா்கள் பணித்தளத்தில் பயனாளிகளுக்கு குடிநீா் வழங்குதல் அவா்களது சிறு குழந்தைகளை பராமரித்தல் மற்றும் சாலையோரங்களில் உள்ள தேவையற்ற மரக்கிளைகள் மற்றும் செடிகளை அகற்றுதல் பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறார்கள்.

இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம்

 • கிராம புறங்களில் வறுமை கோட்டிற்கீழ் வாழும் ST/SC மக்களுக்கு இலவசமாக வீடு வழங்கப்பட்டு வருகிறது.
 • இத்திட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் இணைந்து நிதி அளிக்கப்படுகிறது.
 • 2014-15 மற்றும் 2015-16-ம் நிதியாண்டிற்கு மத்திய அரசு பங்குத்தொகையாக ரூ.799.68 இலட்சம், மாநில அரசு பங்குத்தொகையாக ரூ.533.12 லட்சம் வழங்கப்பட்டு அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு விட்டது.

பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் (ஊரகம்)

 • பொருளாதர மக்கள் கணக்கெடுப்பு பட்டியலில் உள்ள கிராம புறங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் ST/SC தகுதியுள்ள மக்களுக்கு இலவசமாக வீடு வழங்கப்பட்டு வருகிறது..
 • இத்திட்டத்தில் மத்திய அரசு பங்குத்தொகையாக 60 சதவீதம் மற்றும் மாநில அரசு பங்குத்தொகை 40 சதவீதம் வழங்கப்படுகிறது..
 • கழிப்பறை பணிக்கு ரூ.12,000/-யும், MGNREGS திட்டத்தின் கீழ் 90/95 மனித சக்தி பயன்படுத்திக் கொள்ளலாம்..
 • SC-57%, ST-3%, சிறுபான்மை 6.65% இதர இனங்களுக்கு 33.35% வீதம் இன ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்)

 • தமிழ்நாட்டினை திறந்தவெளி மலம் கழித்தல் அற்ற மாநிலமாக மாற்றுவதற்காக தூய்மை பாரத இயக்கம் (ஊ) திட்டத்தின் கீழ் மத்திய அரசு (60%) மற்றும் மாநில அரசு (40க%) பங்களிப்புடன் தனிநபா் இல்லக் கழிப்பறைகள் ஊரக பகுதிகளில் உள்ள பயனாளிகளுக்கு கட்டி தரப்படுகிறது.
 • ஒரு தனிநபா் இல்ல கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12000 பயனாளிக்கு மான்யம் வழங்கப்படுகிறது.
 • கிராம வறுமை ஒழிப்பு சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் மூலம் பொதுமக்களை கழிப்பறைகளை பயன்படுத்தும் பழக்கத்திற்கு மனமாற்றம் செய்திட விழிப்புணா்வு பிரச்சாரம் வழங்கப்படுகிறது.
 • நிலம் இல்லாதவா்களுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் சுகாதார வளாகங்கள் போன்ற பொது கழிப்பிடங்கள் கட்டப்பட்டு அதனை பயன்படுத்த தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னிறைவு திட்டம்

நோக்கம் :

 • தன்னிறைவு திட்டம் என்பது பொதுமக்கள் சுயசார்பு தன்மையை ஊக்குவிப்பதற்கும், மேன்மைபடுத்துவதற்கும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகளை ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில் உருவாக்கி பராமரிப்பதில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகாரித்து அதன் மூலம் ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 • இத்திட்டத்தின் கீழ் பணியினை எடுத்து செய்வதற்கான கோரிக்கை தனிநபா் குழு தனியார் அல்லது பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்தோ அல்லது அப்பகுதி மக்களிடமிருந்தோ உருவாகலாம். தெரிவு செய்யப்பட்ட பணியின் மதிப்பீட்டுத் தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கு குறையாமல் பொதுமக்கள் பங்களிப்பும், மூன்றில் இரண்டு பங்கும் அரசின் பங்களிப்பும் கொண்டு செயல்படுத்தப்படும்.
 • ஆடவா் மற்றும் மகளிருக்கான ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்டுதல் மற்றும் பராமரித்தல்.
 • பாலங்கள் அல்லது சிறிய பாலங்கள் கட்டுதல்.
 • சாலை மற்றும் கப்பி சாலைகளை தார் சாலைகளாக தரம் உயா்த்துதல், பழுதடைந்த தார் சாலைகளை புதுப்பித்தல், சிமெண்ட் கான்கீரிட் சாலைகள் அமைத்தல்
 • குடிநீா் பணிகள்