மூடு

திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப.

Collector New1.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாக நடுவர் திரு. சந்தீப் நந்தூரி அவர்கள் 2009ஆம் வருடத்திய இந்திய ஆட்சியில் சேர்ந்தவராவார். ஐஹதராபாத், உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் மற்றும் பெங்களுருவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் MBA பட்டம் பெற்றுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் துணை ஆட்சியர் (பயிற்சி) முடித்த பிறகு கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் சார் ஆட்சியராக பணியாற்றியுள்ளார். அதன்பின், சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் கூடுதல் திட்ட இயக்குராகவும் அதன்பின் சென்னை மாநகர குடிநீர் வாரிய செயல் இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார். பின்னர் 2016-ல் பதிவு உயர்வு பெற்று மதுரை மாநகராட்சி ஆணையராகவும், 05.06.2017 முதல் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராகவும் மற்றும் 24.05.2018 முதல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பணியாற்றியுள்ளார். திரு. சந்தீப் நந்தூரி அவர்கள் 15.11.2020-ல் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட குற்றவியல் நடுவராக பணியேற்றுள்ளார்.