மூடு

தோட்டக்கலை துறை

முன்னுரை:

வடகிழக்கு மண்டல பகுதியில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்த பயிர் சாகுபடி பரப்பு 192174.70 ஹெக்டோ் ஆகும்.  இதில் தோட்டக்கலைப் பயிர்கள் 27103.90 ஹெக்டோ் பரப்பளவிற்கு பயிரிடப்பட்டு வருகிறது.  வாழை, மா, மரவள்ளி, தக்காளி, மிளகாய், கத்தரி, வெண்டை, தர்பூசணி, முலாம்பழம், கொடிவகை காய்கறிகள், மஞ்சள், கோலியஸ், லெமன் கிராஸ், பால்மரோசா, மல்லிகை, சாமந்தி, சம்பங்கி மற்றும் மற்ற காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.  திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாது மலையில் சீதா மற்றும் பலா, படவேடு பகுதியில் வாழை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.  தோராயமாக 50மூ மக்கள் வேளாண்மை சார்ந்த பணியினை சார்ந்துள்ளனர்.

 

வ.

எண்.

நிலத்தின் வகை நிலப்பரப்பு (எக்டரில்)

(2019 – 20)

சதவீதம்
1. மொத்த நிலப்பரப்பு 631205.00 100
2. மொத்த சாகுபடி பரப்பு 192174.70 30.45
3. தோட்டக்கலைப் பயிர் பரப்பு 27103.90 14.10

 

வட்டாரங்கள்:-

வ.

எண்

வட்டாரம்/

ஊராட்சி ஒன்றியம்

ஊராட்சிகளின்

எண்ணிக்கை

வருவாய் கிராமங்களின்

எண்ணிக்கை

1. திருவண்ணாமலை 69 89
2. கீழ்பென்னாத்தூா் 45 64
3. துரிஞ்சாபுரம் 47 60
4. போளுா் 40 56
5. கலசபாக்கம் 45 49
6. சேத்துப்பட்டு 49 63
7. செங்கம் 44 61
8. புதுப்பாளையம் 37 43
9. தண்டராம்பட்டு 47 60
10. ஜமுனாமரத்தூா் 11 38
11. செய்யாறு 53 70
12. அனக்காவுர் 55 61
13. வெம்பாக்கம் 64 91
14. வந்தவாசி 61 71
15. தெள்ளார் 61 69
16. பெரணமல்லூா் 57 67
17. ஆரணி 38 28
18. மேற்கு ஆரணி 37 26
மொத்தம் 860 1066

 

நில வகைப்பாடு:      

வ.

எண்

நில வகைப்பாடு பரப்பு

(எக்டா்)

சதவீதம்
1. வனப்பகுதி 1010.175 0.16%
2. பயிரிட இயலாத பயனற்ற பகுதி 20585.41 3.26%
3. விவசாயமல்லாத பயன்பாடுகள் 96500.91 15.29%
4. பயிரிட ஏற்ற பயனற்ற பகுதி 8368.88 1.33%
5. நிரந்தரமான பயனற்ற பகுதி 2931.15 0.46%
6. பலதரப்பட்ட மரப்பயிர்கள் மற்றும் தோப்புகள் 2141.165 0.34%
7. தற்போதைய தரிசு நிலம் 131392.8 2.82%
8. இதர தரிசு நிலம் 24300.16 3.85%
9. மொத்த பயிர் பரப்பு 192174.70 30.45%
மொத்தம் 479405.355 75.95%
வகைப்படுத்தப்படாத வனப்பகுதி 0 0.00%
காப்புக் காடுகள் 151793.645 24.05%
மொத்தக் கூடுதல் (மொத்த நிலப்பரப்பு) 631205.00 100%

 

தோட்டக்கலைப் பயிர் பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் விவரங்கள்:-

வ.

எண்

விவரம் சாதாரண

பரப்பு (எக்டா்)

பரப்பு

(எக்டா்)

உற்பத்தி

(மெட்ரிக் டன்)

உற்பத்தி தன்மை

(மெட்ரிக் டன்/

எக்டா்)

1. பழங்கள் 3509.00 4662.90 47701.467 10.23
2. காய்கறிகள் 9063.00 11805.00 198324.00 16.80
3. மலா்கள் 4376.00 4840.00 42398.40 8.76
4. நறுமணப்பயிர்கள் 2119.00 2017.00 3751.62 1.86
5. மலைப்பயிர்கள் 571.00 654.00 300.84 0.46
6. மூலிகைப் பயிர்கள் மற்றும்

வாசனைப் பயிர்கள்

2924.00 3215.00 26125.00 8.36

 

முதன்மைப் பயிர்களின் பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் விவரங்கள்:-

வ.

எண்

விவரம் சாதாரண

பரப்பு (எக்டா்)

பரப்பு

(எக்டா்)

உற்பத்தி

(மெட்ரிக் டன்)

உற்பத்தி தன்மை

(மெட்ரிக் டன்/எக்டா்)

1. வாழை 1971.00 2685.00 107400 40
2. மா 1018.00 1334.00 21344 16
3. மரவள்ளி 1970.00 1766.00 79470 45
4. தக்காளி 389.00 663.00 23205 35
5. மிளகாய் 1445.00 1459.00 29180 20
6. கத்தரி 1345.00 1642.00 41050 25
7. வெண்டை 1078.00 1401.00 21015 15
8. தர்பூசணி 470.00 676.00 20280 30
9. முலாம்பழம் 228.00 502.00 10040 20
10. கொடிவகைக் காய்கறிகள் 552.00 997.00 17946 18
11. மஞ்சள் 345.00 242.00 6050 25
12. கோலியஸ் 1387.00 1793.00 3586 2
13. லெமன்கிராஸ் 841.00 426.00 10650 25
14. பால்மரோசா 437.00 842.00 25260 30
15. மல்லிகை 1174.00 1250.00 15000 12
16. சம்பங்கி 1905.00 2110.00 31650 15

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பயிரிடப்பட்ட தோட்டக்கலைப் பயிர்களின் சாகுபடி பரப்பு விவரங்கள்:

வ.

எண்

பயிர்கள் சாதாரண

பரப்பு

(எக்டா்)

                     பரப்பு (எக்டரில்)
2015 – 16 2016 – 17 2017 – 19 2018 – 19 2019 – 20
1. பழங்கள் 3509.00 3782.00 3943.50 4181.89 4285.00 4662.90
2. காய்கறிகள் 9063.00 6842.00 7010.20 7280.18 9889.20 11805.00
3. மலா்கள் 876.00 2982.70 3120.60 3213.35 4036.00 4840.00
4. நறுமணப் பயிர்கள் 2119.00 1028.50 1203.20 1431.25 1972.00 2017.00
5. மலைப்பயிர்கள் 571.00 587.20 594.30 605.87 1064.00 654.00
6. மூலிகைப் பயிர்கள்

மற்றும் வாசனைப்

பயிர்கள்

2924.00 1987.40 2142.50 2381.36 2668.00 3125.00
மொத்தம் 22562.00 17209.8 18014.3 19093.9 23914.2 27103.9

    

மண் வகைப்பாடு:

திருவண்ணாமலை மாவட்டத்தில் செம்மண், களிமண் மற்றும் சரளை மண் போன்ற மண் வகைகள் காணப்படுகின்றன.  செம்மண் ஏறக்குறைய எல்லா வட்டங்களிலும் காணப்பட்டாலும் குறிப்பாக திருவண்ணாமலை, செங்கம், போளுா் மற்றும் வந்தவாசி ஆகிய வட்டங்களில் அதிக பரப்பளவில் உள்ளன. குறிப்பாக வண்டல் மண், மணற்பாங்கான மண் இம்மாவட்டம் முழுவதும் பரவலாகக் காணப்படுகிறது.  வந்தவாசி மற்றும் செய்யாறு வட்டத்தில் கரிசல் மண் ஏரிக்கரைகளிலும் மற்றும் ஆற்றுப்படுகைகளிலும் காணப்படுகின்றன.

வ.எண். மண் வகை மாவட்டத்தில் காணப்படும் இடங்கள்
1. செம்மண் திருவண்ணாமலை, செங்கம் மற்றும் போளுா்

வட்டங்களில் சிறிய பகுதிகளில் உள்ளன.

2. கரிசல் மண் திருவண்ணாமலை, செங்கம் மற்றும் போளுா்,

ஆரணி,  செய்யார் மற்றும்  வந்தவாசி வட்டங்கள்

 

பருவநிலை விவரங்கள்:

 1. பருவ நிலை மற்றும் மழைப்பொழிவு:

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுவாக மிதமான வெப்பநிலையே நிலவுகிறது.  இம்மாவட்டம் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவக் காற்றுகளினால் சராசரியாக 1,074.70 மி.மீ. மழைப் பொழிவு பெறுகிறது.  ஏறக்குறைய  40% மழைப் பொழிவு வடகிழக்கு பருவக்காற்று காலங்களிலேயே (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) பெறப்படுகிறது.  தென் மேற்கு பருவக் காற்று காலத்தில் இம்மாவட்டமானது சராசரி மழைப் பொழிவாக 468.40 மி.மீ.அளவிலும் வடகிழக்கு பருவக் காற்று காலத்தில் 457.10 மி.மீ. மழைப் பொழிவும் பெறுகிறது.

குளிர்காலம் கோடைக்காலம் தென்மேற்கு

பருவக்காற்று

(ஜுன் – செப்டம்பா்)

வடகிழக்கு

பருவக்காற்று

(அக்டோபா் – டிசம்பா்)

வருடாந்திர

மழைப் பொழிவு (மி.மீ.)

36.50 112.70 468.40 457.10 1074.70
 1. வெப்ப நிலை:

திருவண்ணாமலை மாவட்டத்தின் சராசரி வெப்ப நிலை 28.2oC ஆகும்.  குறைந்த பட்ச வெப்பநிலை 7.9oC  என்ற அளவில் வேறுபடுகிறது.  இம்மாவட்டத்தின் சராசரி குறைந்த பட்சம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலையானது 22oC முதல் 42oC வரை மற்றும் 18oC முதல் 31oC வரையிலும் வேறுபடுகிறது.

மிக வறட்சியான மாதமான பிப்ரவரியில் 11 மிமி மழைப்பொழிவும், அக்டோபா் மாதத்தில் மிக அதிக அளவாக சராசரியாக 226 மிமீ மழைப்பொழிவும் பெறுகிறது. ஆண்டின் மிக அதிக வெப்பமான மே மாதத்தில் சராசரியாக 32.1oC வெப்ப நிலையும், டிசம்பா் மாதத்தில் மிகக் குறைந்த அளவு 24.2oC வெப்ப நிலையும் நிலவுகிறது.  வறட்சியான மாதத்திற்கும் ஈரமான மாதத்திற்கும் இடையேயான மழைப்பொழிவு வேறுபாடு 215 மிமீ ஆக உள்ளது

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள்

நோக்கம்;

தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தி, உற்பத்தி திறன் மற்றும் விவசாயிகளின் வருமானம் இவற்றைப் பெருக்கும் நோக்கில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  விவசாய பெருமக்களிடையே உயா் சாகுபடி தொழில் நுட்பங்களை பரப்புவதற்காக பசுமைக்குடில் அமைத்தல், நிழல் வலைக்குடில், நிலப்போர்வை, அதிக அளவு உற்பத்தியினை தரக் கூடிய பழச்செடிகள், காய்கறி விதைத்தளைகள், குழித்தட்டு நாற்றுகள் மற்றும் மலைப்பயிர்களுக்கான செடிகள் விநியோகம் போன்ற பல திட்டங்கள் தோட்டக்கலைத் துறை மூலம்  செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

 

திட்டங்கள்:-

 

 1. பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத் திட்டம் (PMKSY)
 2. துணை நீா் மேலாண்மை செயல்பாடுகள் (PMKSY – SWMA)
 3. தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டம் (NADP)
 4. ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் (IHDS)
 5. தேசிய மூங்கில் பயிர்கள் இயக்கம் (NMMP)
 6. தேசிய மூங்கில் இயக்கம் (NBM)
 7. கூட்டுப் பண்ணைய திட்டம் (Collective Farming)
 8. பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY)
 9. தமிழ்நாடு நீா்ப்பாசன மேலாண்மை நவீன மயமாக்குதல் திட்டம் (TNIAMP)

 

 1. பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத் திட்டம் (PMKSY):-

 

முதன்மை  நோக்கம்:-  இத்திட்டத்தின் நோக்கம் ஒரு துளி நீரில் அதிக உற்பத்தி என்பதாகும். நுண்ணீர் பாசனத் திட்டத்தின் தொழில்நுட்பங்களை உட்புகுத்துவதன் மூலம் நீர்ப்பயன்பாட்டினை திறம்பட, மிக அதிக அளவு பயனுள்ளதாக்க முடியும்.

.  .

ஒவ்வொரு நீா்த்துளியையும் மிகத் திறமையான முறையில் பயன்படுத்துவதன் மூலம் அதிக அளவு நீா் சேமிப்பு மற்றும் அதிக உற்பத்தி போன்ற காரணங்களினால் நுண்ணீர் பாசனத் தொழில் நுட்பம் விவசாயத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.  குறிப்பிடத்தக்க அளவு நீா் ஆதாரங்களின் வளா்ச்சி, வேளாண் உற்பத்தி மற்றும் பொருளாதார வளா்ச்சி போன்ற காரணங்களினால். நுண்ணீர் பாசனத் திட்டம் விவசாயப் பெருமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

அதிக அளவு மற்றும் தரமான வேளாண் உற்பத்தி காரணமாக சொட்டு நீர்ப் பாசனத் திட்டம் தமிழ்நாட்டு விவசாய மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது.  நீரின் தேவையானது அதிகரித்துள்ளதாலும், கூலியாட்கள் அரிதாகக் கிடைக்கப் பெறுவதனாலும் நுண்ணீர் பாசனத் திட்டம் செயல்படுத்துவது மிக முக்கியமானதாக உள்ளது..

 

நுண்ணீர் பாசனத் திட்டத்தில், தொழில் நுட்பங்களினால் குறைந்த அளவு நீா் உபயோகிப்பதன் மூலம் நீா் பயன்பாடு 40% முதல் 60% வரை சேமிக்கப்படுகிறது.  நுண்ணீர் பாசனத் திட்டத்தில் உரங்களை பயிர்களின் வோ்ப்பகுதிக்கு நேரடியாக கொண்டு சோ்ப்பதால் உரங்களின் செயல் திறன் அதிகரிக்கிறது.

 

நுண்ணீர் பாசனத் திட்டத்தில் சிறு/குறு விவசாயிகள் 100% மானியமும் பெரு விவசாயிகள் 75%  மானியமும் அதிகபட்சமாக 5 எக்டா் வரையில் மானியம் பெறுவதன் மூலம் விவசாயிகள் இத்திட்டத்தினை செயல்படுத்த ஊக்கப்படுத்தப்படுகின்றனா்.

 

ஏற்கனவே இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற விவசாயிகள் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு மட்டுமே இத்திட்டத்தில் மீண்டும் பயன்பெற முடியும்.

 

 1. பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் துணை நீா் மேலாண்மை நடவடிக்கைகள் (SWMA):-

 

நுண்ணீர் பாசனத் திட்டத்தின் ஒரு பகுதியாக துணை நீா் மேலாண்மை செயல்பாடுகளில் நுண்ணீா் சேமிப்பு அமைப்பு நிறுவுதல், மானாவாரி பகுதிகளில் தண்ணீர் பயன்பாட்டினை திறம்பட கையாளும் பொருட்டும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 

நோக்கம்:-

2019 – 20 ஆம் ஆண்டில் கீழ்க்கண்ட நடவடிக்கைகள் மூலம் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனத் தொழில் நுட்பங்களை விளம்பரப்படுத்தவும், நுண்ணீர் பாசனத் திட்டத்தின் மூலம் நீா் ஆதாரங்களை பண்ணை அளவில் அமைத்திடவும் ஊக்குவித்தல்.

 

 1. ஆழ்துளைக் கிணறுகளை பாதுகாப்பான குறுவட்டங்களில் அமைத்தல்.
 2. டீசல் பம்ப் செட்கள் மற்றும் மின் மோட்டார்களை நிறுவுதல்.
 3. நீா் எடுத்துச் செல்லும் குழாய்களை பதித்தல்.
 4. தரைமட்ட நீா் சேகரிப்பு தொட்டி கட்டுதல்.

 

இத்திட்டத்தின் மூலம் தரைமட்ட நீா் சேகரிப்பு தொட்டி கட்டுமானம் செய்ய ரூ.40,000/-ம், பாதுகாப்பான குறுவட்டங்களில் ஆழ்துளைக் கிணறு அமைக்க ரூ.25,000-ம், நீா் எடுத்துச் செல்லும் குழாய்களை பதித்தலுக்காக ரூ.10,000 மற்றும் மின் மோட்டார்கள் மற்றும் டீசல் பம்ப் செட்கள் அமைக்க ரூ.15,000 ம் 50%  பின்னேற்பு மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

 

தகுதிவாய்ந்த பயனாளிகள்:-

 

இத்திட்டத்தில் பயன்பெற நுண்ணீா் பாசன அமைப்புகளை நிறுவ ஆா்வமுள்ள சிறு, குறு மற்றும் பெரு விவசாயிகள் மட்டும் தகுதி வாய்ந்தவா்கள் ஆவா்.  நுண்ணீர் பாசன அமைப்புகளை நிறுவத் தவறிய விவசாயிகள் மானியம் பெறத் தகுதியற்றவா்.

 

III. தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டம் (NADP):-

 

நோக்கம்:- தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்க புதிய தொழில் நுட்ப முறைகளை கையாளுதல் மூலம் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலை திரும்ப கிடைக்க வழி வகை செய்யும்.

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் இத்திட்டமானது மத்திய, மாநில அரசுகளுக்கிடையேயான 60:40 என்ற விகிதாசாரத்தில் செயல்படுத்தப்படுகிறது.  வெங்காய பரப்பு விரிவாக்கம், .இயற்கை முறையிலான காய்கறி உற்பத்தி, இயற்கை சான்றளிப்பு, நிரந்தர கல்பந்தல் அமைப்பு மற்றும் முட்டுக் கொடுத்தல் போன்ற உட்கூறுகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

 

 1. வெங்காய பரப்பு விரிவாக்கம்:- 40% பின்னேற்பு மானியமாக பயனாளி ஒருவருக்கு அதிகபட்சம் 2.00 ஹெக்டேர் வரையிலும் ஹெக்டோ் ஒன்றுக்கு ரூ.20,000/- வீதம் மானியம் வழங்கப்படுகிறது.

 

 1. இயற்கை முறை காய்கறி உற்பத்தி:- இதன்படி கீரை வகைகளுக்கு ஹெக்டோ் ஒன்றுக்கு ரூ.2,500/- வரையிலும், தக்காளி, கத்தரி, வெண்டை, அவரை மற்றும் கொடி வகை காய்கறிகளுக்கு ஹெக்டோ் ஒன்றுக்கு ரூ.3,750/- வரையிலும், மானியம் வழங்கப்படுகிறது. இயற்கை முறையில் காய்கறி உற்பத்தி செய்யும் அனைத்து விவசாயிகளும் தகுதியானவா்கள். ஆனால் விவசாயிகள் ”இயற்கை முறை விவசாயி” என்ற சான்று பெற்றிருத்தல் அவசியம். ஒவ்வொரு பயனாளியும் அதிகபட்சம் 2 ஹெக்டோ் வரையில் பயன்பெறலாம்.

 

iii. இயற்கை முறை உற்பத்திக்கு சான்றளித்தல்:- விவசாயிகள் குழு/தனி நபா் விவசாயி ஆகியோர் தகுதியானவர்கள்.  குழுக்கள் அனைத்தும் சங்க விதிகளின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டு குழுவில் 25 முதல் 500 நபா்கள் உள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ.500/- வீதம் நிதி உதவி வழங்கப்படும்.

 

ஆதார அமைப்பு :-           

பந்தல்  ஒவ்வொரு பயனாளியும் அதிகபட்சமாக 2 ஹெக்டோ் அளவிற்கு ஹெக்டோ் ஒன்றுக்கு  ரூ.2.00 இலட்சம் வரையிலும் 50% மானியம் பெறத் தகுதி உடையவா்.

கொடி வகைக் காய்கறிகள், பந்தல் அவரை, பீன்ஸ், ஜொ்க்கின்ஸ், வெள்ளரிக்காய்,  கோவைக்காய், மற்றும் மற்ற கொடி வகைக் காய்கறிகள்,  பேஷன் பழம் மற்றும் திராட்சைப் பழங்கள்  மற்றும் நறுமணப் பயிர்கள், வெற்றிலைக் கொடி மற்றும் வெண்ணிலா போன்ற மலைப்பயிர்கள் பந்தல் முறையில் பயிர் செய்யத் தகுந்தவை.

 

முட்டுக் கொடுத்தல்:-  50% பின்னேற்பு மானியமாக ஒவ்வொரு பயனாளிக்கும் அதிகபட்சமாக 1 ஹெக்டோ் வரையிலும், ஹெக்டோ் ஒன்றுக்கு ரூ.25,000 வரை மானியம் வழங்கப்படுகிறது.

 

 1. IV. ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டம் (IHDS):-

 

நோக்கம்:- விவசாயிகளுக்கு 40மூ மானியத்தில் விதைகள் மற்றும் இதர தரமான நடவுப் பொருட்கள் வழங்கி தோட்டக்கலைப் பயிர்களின் பரப்பினை அதிகரிக்கச் செய்தல்.

 

இத்திட்டம் 100% தமிழ்நாடு அரசின் நிதியின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

.

 1. பரப்பு விரிவாக்கம் (Area Expansion Programme):-

 

 1. குழித்தட்டு நாற்றுகள் உற்பத்தி செய்தல்:- கலப்பின காய்கறி நாற்றுகள் ( தக்காளி, கத்தரி மற்றும் மிளகாய்) சாகுபடி செய்வதற்காக 40% மானியத்தில் அதிகபட்சமாக ஹெக்டோ் ஒன்றுக்கு ரூ.20,000/- வரையிலும், காய்கறி நாற்றுகள் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. அதிகபட்சம் ஒரு விவசாயி 2 ஹெக்டோ் வரையில் பயன்பெறலாம்.

 

 1. பாரம்பரிய சாகுபடியாளா்களை ஊக்குவித்தல்:- பாரம்பரிய முறையில் பழங்கள் மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்பவா்களுக்கு அதிகபட்சமாக ஹெக்டேருக்கு ரூ.15,000/- மானியம் வழங்கப்படுகிறது. விவசாயி ஒவ்வொருவரும் காய்கறிகள் சாகுபடிக்கு 2 ஹெக்டோ் வரையிலும், பழங்கள் சாகுபடிக்கு 4 ஹெக்டோ் வரையிலும், பயன்பெறலாம்.

 

 1. சிறு பழங்கள் உற்பத்தியினை பெருக்குதல்:- 50% மானியத்தில் நடவுப் பொருட்களுக்கு அதிகபட்சமாக ஹெக்டேருக்கு ரூ.30,000/-மானியம் வழங்கப்படுகிறது. விவசாயி ஒவ்வொருவரும் காய்கறிகள் சாகுபடிக்கு 2 ஹெக்டோ் வரையிலும், பழங்கள் சாகுபடிக்கு 4 ஹெக்டோ் வரையிலும், பயன்பெறலாம். லிச்சி, பிளம், பீச், பயிர், தண்ணீா் ஆப்பிள், ரம்புட்டான், டிராகன் பழம், ஸ்ட்ராபொ்ரி, கிவி, துரியன், அவகேடா, மங்குஸ்தான், கரம்போலா, மாண்ட்ரீன் ஆரஞ்சு, பேஷன் பழம், பேரீட்சை மற்றும் அத்தி போன்ற பழ வகைகள் பயிரிடும் விவசாயிகள் பயன்பெறலாம்.

 

 1. விதைகள் மூலமாக காய்கறி உற்பத்தியினை பெருக்குதல்:- 40% மானியத்தில் அதிகபட்சமாக ஹெக்டோ் ஒன்றுக்கு ரூ.10,000/- வரை மானியம் வழங்கப்படுகிறது. வெண்டை, முள்ளங்கி, கீரைகள், அவரை, வெங்காயம் மற்றும் இதர காய்கறிகளுக்கு மானியம் பெறலாம்.  விவசாயிகள்  ஒவ்வொருவரும் காய்கறிகள் சாகுபடிக்கு 2 ஹெக்டோ் வரை மானியம் பெறலாம்.

 

 1. பயிர் ஊக்கத் தொகை திட்டம்:- பருவமற்ற காலங்களில் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2,500-ம் அதிகபட்சமாக 2 ஹெக்டோ் வரையில் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. மற்ற திட்டங்களில் பயன்பெறாத விவசாயிகள் மட்டுமே இத்திட்டத்தின் மூலம் பயன்பெறத் தகுதியுடையவராவா்.

 

 1. வறட்சியான நிலங்களில் தோட்டக்கலைப்பயிர் சாகுபடி:- அனோனா, பொ், கொடுக்காப்புளி, புளி, நெல்லி, நாவல் மற்றும் விளாம்பழம் போன்ற பழ வகைகள் சாகுபடி செய்யும் விவசாயிகள் 50% மானியத்தில் அதிகபட்சமாக 2 ஹெக்டோ் வரையில் ஹெக்டேருக்கு ரூ.20,000/- வழங்கப்படுகிறது.

 

 1. பழவகைகளின் சாகுபடி பரப்பு விரிவாக்கம்:- பழச்சாகுபடிக்கு 40% மானியத்தில் ஹெக்டோ் ஒன்றுக்கு எலுமிச்சைக்கு ரூ.13,195/-, பப்பாளி சாகுபடிக்கு ரூ.18,496/- மா சாகுபடிக்கு ரூ.6,120ஃ- கொய்யா சாகுபடிக்கு ரூ.9,201/- மற்றும் சப்போட்டடா சாகுபடிக்கு ரூ.10,896/- மானியம் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக காய்கறிகள் சாகுபடிக்கு 4-ஹெக்டோ் வரை மானியம் பெறலாம்.

 

 1. விதைகள் மற்றும் வேர்த்தண்டு பயிர்களின் பரப்பு விரிவாக்கம்:- மஞ்சள் போன்ற வோ்த்தண்டு பயிர் சாகுபடிக்கு 40% வரையிலும் ரூ.12,000/- வரை மானியம் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக 4 ஹெக்டோ் வரை மானியம் பெறலாம்.

 

 1. மலா் சாகுபடி பரப்பு விரிவாக்கம்:- 40% மானியத்தில் மல்லிகை, ரோஜா போன்ற உதிரி மலா்கள் சாகுபடிக்கு ஹெக்டோ் ஒன்றுக்கு ரூ.16,000/-ம், சம்பங்கி மலா் சாகுபடிக்கு ஹெக்டோ் ஒன்றுக்கு ரூ.60,000/- பின்னேற்பு மானியமானது பயிர் பாதுகாப்பு மருந்துகள், நிலம் தயாரிப்பு மற்றும் நீா்ப்பாசனம் போன்றவைகளுக்கு தகுந்த இரசீது அளிக்கும் பட்சத்தில் பயனாளி ஒருவருக்கு அதிகபட்சம் 2 ஹெக்டோ் வரை மானியம் வழங்கப்படுகிறது.

 

 

 1. நறுமணப் பயிர்களின் பரப்பு விரிவாக்கம்:- 40% மானியத்தில் லெமன் கிராஸ் மற்றும் பால்மரோசா சாகுபடிக்கு பின்னேற்பு மானியமாக ஹெக்டோ் ஒன்றுக்கு ரூ.16,000/- வரையில் பயிர் பாதுகாப்பு மருந்துகள், நிலம் தயாரிப்பு மற்றும் நீா்ப்பாசனம் போன்றவைகளுக்கு தகுந்த இரசீது அளிக்கும் பட்சத்தில் பயனாளி ஒருவருக்கு அதிகபட்சம் 4 ஹெக்டோ் வரை மானியம் வழங்கப்படுகிறது.

 

 1. முருங்கைக்காய் சாகுபடி பரப்பு விரிவாக்கம்:- 40% மானியத்தில் முருங்கை சாகுபடிக்கு ஹெக்டோ் ஒன்றுக்கு ரூ.10,000/- வரையிலும் அதிகபட்சம் 2 ஹெக்டேர் வரை மானியம் வழங்கப்படுகிறது. குழித்தட்டு நாற்றுக்கள் அரசு தோட்டக்கலைப் பண்ணையின் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது.-

 

 1. பாதுகாக்கப்பட்ட சாகுபடி:

பசுமைக்குடில் கட்டுமானம் பயனாளி ஒருவருக்கு ஒரு சதுர மீட்டருக்கு ரூ.468/-வீதம் அதிகபட்சம் 4000 ச.மீ வரை 50% மானியம் வழங்கப்படுகிறது.

 

நிழல் வலைக் குடில் அமைத்தல்: பயனாளி ஒருவருக்கு ஒரு சதுர மீட்டருக்கு ரூ.355/- வீதம் அதிகபட்சம் 4000 ச.மீ வரை 50% மானியம் வழங்கப்படுகிறது.

பந்தல் அமைத்தல் பயனாளி ஒருவருக்கு 2 ஹெக்டோ் வரையிலும் ஹெக்டோ் ஒன்றுக்கு ரூ.2.00 இலட்சம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.

 

iii. ஒருங்கிணைந்த அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை:- 

சிப்பம் கட்டும் அறை:- பயிர் அறுவடைக்குப் பின் தரம் பிரித்தல், சுத்தப்படுத்துதல் மற்றும் சிப்பம் கட்டுதல் போன்ற பணிகளுக்கு சிப்பம் கட்டும் அறை கட்டுமானத்திற்கு 50% மானியத்தில் ரூ.2.00 இலட்சம் வரை விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.

 

குறைந்த செலவிலான வெங்காய சேமிப்பு அமைப்பு:- குறைந்த செலவிலான வெங்காய சேமிப்பு அமைப்பு கட்டுமானம் செய்ய 50% மானியத்தில் மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.3500/- வரையில் அதிகபட்சம் 5 மெ.டன் முதல் 50 மெ.டன் வரை விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.

 

IV: சிறப்பு தொழில் நுட்பங்கள்:-

வரழைத் தார் உறை:- (விவசாயி ஒருவருக்கு ஒரு ஹெக்டோ் வரையிலும்) மற்றும் களைப்படுக்கை (விவசாயி ஒருவருக்கு 4,000 ச.மீ. வரையிலும்) விவசாயிகளுக்கு 50% பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.

 

 1. கூடுதல் வருமானம் பெருக்கும் நடவடிக்கைகள்:-

தேனீ வளா்ப்பு 40% பின்னேற்பு மானியம் தேனீ வளா்ப்பிற்காக.விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு ஒரு அறை மட்டுமே அளிக்கப்படுகிறது.

 

விவசாயிகளின் தகுதிகள்:-

சொந்த விவசாய நிலம் வைத்துள்ள அனைத்து விவசாயிகளும், குத்தகை நிலமாயின் திட்டம் சசா்ந்த உட்கூறுகளுக்கு குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் குத்தகை உடன்படிக்கை பத்திரம் வைத்துள்ள விவசாயிகள் தகுதி வாய்ந்தவா்கள்.  பாதுகாக்கப்பட்ட பயிர் சாகுபடி, பயிர் பரப்பு விரிவாக்கம் போன்ற தண்ணீா் பயன்பாடு அதிகமுள்ள திட்டங்களுக்கு உறுதியளிக்கப்பட்ட நுண்ணீா்ப் பாசன வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். பயன்பெற விரும்பும் விவசாயிகள் தேவையான அனைத்து ஆவணங்களையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்க வேண்டும்.  இணைக்கப்பட்ட ஆவணங்கள் நடப்புக் காலத்துக்கு மட்டுமே செல்லுடியாகும்.

 

இத்திட்டத்தின் பல்வேறு வகையான உட்கூறுகளில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் அளிக்க வேண்டிய ஆவணங்கள்:-

1  விண்ணப்பப் படிவம்.

 1. பயனாளி கண்டிப்பாக வுர்ழுசுவுநுவு -ல் பதிவு செய்திருக்க வேண்டும்.
 2. சிட்டா மற்றும் அடங்கல் (அசலில்)
 3. நில வரைபடம்.
 4. பான் காரடு / ஆதார் கார்டு / வாக்காளர் அடையாள அட்டை / குடும்ப அட்டை நகல்.
 5. குத்தகை செய்யும் விவசாயிகளாக இருப்பின், பதிவு செய்யப்பட்ட குத்தகை ஒப்பந்தம்

அளிக்கப்பட வேண்டும்.

 1. சாகுபடி தொடா்பான உட்கூறுகளுக்கு மண் மற்றும் நீா் தொடா்பான பரிசோதனை அறிக்கை.
 2. பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் (3 எண்கள்)
 3. வங்கிக் கணக்கு புத்தகம் (முதல் பக்கம் ஒளி நகல்) வங்கிக் கணக்கு எண்ணை சரிபார்க்க.
 4. ரூ.50,000/- அதிகமாக மானியம் பெறும் உட்கூறுகளுக்கு உறுதி மொழிப் பத்திரம்.
 5. திட்டத்தின் செயல்பாடுக்ள பல்வேறு நிலைகளில் பயனாளியுடன் எடுக்கப்பட்ட வயல்

புகைப்படங்கள்  (பயிர் பரப்பு விரிவாக்கம் மற்றும் திட்ட அடிப்படையிலான நடவடிக்கைகள்).

 1. பணி முடித்த நிலையில் அடையாள குறியுடன் கூடிய நில பலகை (திட்ட

அடிப்படையிலான நடவடிக்கைகள்).

 

V.தேசிய மூலிகைப் பயிர்கள் இயக்கம் (NMMP):-

 

நோக்கம்:- மூலிகைப் பயிர்களின் சாகுபடியினை விவசாயிகளிடையே பெருக்கும் நோக்கில் ஒரு்ங்கிணைப்பு, தரம் மற்றும் மேம்பாடு ஆகியவற்றினை கருத்தில்  கொண்டு பண்ணை விவசாயத்தில் மூலிகைத் தாவரங்களை பயிரிட்டு விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குதல்.

மூலிகைப் பயிர்கள் சாகுபடி தொகுப்பு விவசாயிகள் கொண்டு மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது.  ஒவ்வொரு குழுவும் ஐந்து விவசாயிகளைக் கொண்டு குறைந்த பட்சம் 2 ஹெக்டோ் வரையில் பயிரிடலாம்.  இவ்வாறு பயிரிடப்படும் நிலம் மற்றும் விவசாயிகள் குறை்நத பட்சம் 3 கிராமங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.  ஒரு விவசாயி அதே நிலத்தில் மூன்று ஆண்டுகளில் ஒரு முறைக்கு மேலாக மூலிகைப் பயிர்கள் பயிரிட அனுமதிக்கப்பட மாட்டார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கோலியஸ் மூலிகை பரவலாக பயிரிடப்படுகிறது.  பின்னேற்பு மானியமாக பயனாளி ஒருவருக்கு குறைந்த பட்சம் 2 எக்டா் அளவிற்கு எக்டா் ஒன்றுக்கு ரூ.18,886.89 வரை பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.

 

 1. தேசிய மூங்கில் இயக்கம்(NBM):-

 

1.பின்னேற்பு மானியமாக ஒரு ஹெக்டேருக்கு 40 கன்றுகள் வீதம் 5 X 5 மீட்டா் இடைவெளியில் நிலத்தின் வரப்பின் மீதோ அல்லது மொத்தமாகவோ, பொது வகை நிலங்களில் பயிரிடுவதற்கு ஹெக்டோ் ஒன்றுக்கு ரூ.50,000/-, தனி நபா் நிலங்களில் பயிரிடுவதற்கு ஹெக்டோ் ஒன்றுக்கு ரூ.25,000/- வழங்கப்படுகிறது.

2.ஒவ்வொரு நிலமும் க்ட்டாயம் புவிசார் குறியீடுகளுடன் புகைப்படம் இருக்க வேண்டும்.

3.சமுதாய நிலம், கல்லூரிகள், பள்ளிகள், கோவில்கள், ஏரிகள், புங்காக்கள், அரசு தோட்டக்கலைப் பண்ணைகள் போன்ற பொது வகை நிலங்களிலும் பயிரிடலாம்.

 

VII.கூட்டுப் பண்ணைய திட்டம் (Collective Farming):-

நோக்கம்:- கடன் பெறுவதை எளிமையாக்குதல், தொழில் நுட்பங்களை பயன்படுத்துதல், முற்பட்ட மற்றம் பிற்பட்ட இனங்களை ஒருங்கிணைத்தல் போன்ற காரணங்களுக்காக கூட்டுப் பண்ணைய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 

2017 – 2018 ஆம் ஆண்டின் பட்ஜெட் உரையில் தமிழக அரசு சிறு மற்றும் குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து உழவா் உற்பத்தியாளா் குழுக்களை ஏற்படுத்தி அக்குழுக்கள் உழவா் உற்பத்தியாளா் அமைப்புகளாக செயல்பட ஒரு புதுமையான திட்டத்தினை அறிவித்தது.

 

2017 – 18 முதல் 2019 – 20 வரை 326 உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் ரூ.16.30 கோடி நிதி ஒதுக்கீட்டில் துவங்கப்பட்டது.  326 உழவா் உற்பத்தியாளா் குழுக்களில் 66 உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் தோட்டக்கலைத் துறையின் மூலம் துவங்கப்பட்டது.

 

சுழற்சி நிதியில் ரூ.3.30/- கோடிக்கு வேளாண் கருவிகள் வாங்கப்பட்டு அவைகள் 22 உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு பண்ணை சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வழங்கப்பட்டது.

 

நடப்பாண்டில் (2020-21) வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை இரண்டிற்குமாக 67 உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் துவங்கப்பட்டுள்ளது. இதில் 22 உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் தோட்டக்கலைத் துறை மூலம் துவங்கப்பட்டுள்ளது.

 

VIII. தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் (TNIAMP):-

உலக வங்கி நிதியுதவியின் கீழ் துவங்கப்பட்டுள்ள தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் TNIAMP திட்டம் தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

 

முதன்மை நோக்கம்:- நெல் பயிருக்கு மாற்றாக தோட்டக்கலைப் பயிர்களை பயிரிடுவது, நீா் பாதுகாப்பு, மருந்துகளின் பயன்பாட்டினை குறைப்பது, மற்றும் காலநிலை மாறுதலுக்கேற்ப தொழில் நுட்பங்களை கையாளுதல்.

 

பகுதி-II மற்றும் பகுதி III:- 2019 – 20 முதல் 2023 – 24 என அடுத்த நான்கு ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டு, செயல் விளக்கமாக பழங்கள், கலப்பின காய்கறிகள், மலா்கள் சாகுபடிக்காக ரூ.607.851 இலட்சம் செலவில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 வட்டாரங்களில் 3 உபவடி நீா் பகுதிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.

 

பகுதி-II (முதல் வருடம் 2019-20):- TNIAMP Phase-II முதலாம் ஆண்டுத் திட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு லட்டாரத்தில் ஆழியாறு உபவடிநீா் பகுதியில் ரூ.38.78 இலட்சம் இலக்கில் தோட்டக்கலைப் பயிர்களுக்கு மட்டும் ரூ.15.60 இலட்சம் செலவிலும்,, நுண்ணீா்ப் பாசனத்திற்கு ரூ.22.00 இலட்சம் செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

பகுதி II (இரண்டாம் வருடம் 2020-21):- TNIAMP Phase-II  இரண்டாம்  ஆண்டுத் திட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு லட்டாரத்தில் ஆழியாறு உபவடிநீா் பகுதியில்  தோட்டக்கலைப் பயிர்களுக்கு ரூ.9.00 இலட்சம் செலவிலும், நுண்ணீா்ப் பாசனத்திற்கு ரூ.11.00 இலட்சம் செலவினம் மேற்கொள்ள நிதி இலக்கு பெறப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 

பகுதி-III (முதல் வருடம் 2020-21):- TNIAMP Phase-II முதலாம் ஆண்டுத் திட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு மற்றும் வேகவதி உப வடி நீா் பகுதியில் 11 வட்டாரங்களில் தோட்டக்கலைப் பயிர்களுக்கு ரூ.148.71 இலட்சம் செலவிலும் நுண்ணீா்ப் பாசனத்திற்கு ரூ.403.00 இலட்சம் செலவினம் மேற்கொள்ள நிதி இலக்கு பெறப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 

 1. IX. பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் (PMFBY):-

 

நோக்கம்:- இயற்கை சீற்றங்களினால் புச்சிகள் மற்றும் நோய்கள் மூலம் பாதிப்புக்குள்ளாகும் பயிர்களுக்கு அறிவிக்கப்பட்ட கிராமங்களில் பயிர் காப்பீடு செய்து காப்பீட்டுத் தொகை பெற்றுப் பயன் பெறுதல் இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

 

தமிழ்நாட்டில் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் தேசிய வேளாண்மை காப்பீடு திட்ட்த்திற்கு (NAIS) மாற்றாக 2016 காரிப் பருவத்தில் இருந்து பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  .இத்திட்டத்தின்படி விவசாயிகள் அறிவிக்கப்பட்ட தோட்டக்கலைப் பயிர்களான வாழை, மரவள்ளி, வெங்காயம் மற்றும் மிளகாய் போன்றவற்றிற்கு அறிவிக்கப்பட்ட வருவாய் கிராமங்களில் பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம்.

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழை, மா, மரவள்ளி, மஞ்சள் மற்றும் சிவப்பு மிளகாய் போன்றவை முதன்மையாக அறிவிக்கப்பட்ட பயிர்களாகும். அறிவிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் மேற்கண்ட பயிர்களுக்கு பிரிமியம் தொகை (காப்பீட்டுத் தொகையில் 5%) செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்.

 

பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2016 – 17 முதல் 2019 – 20 ஆம் வரையிலான ஆண்டுகளில் (காரிப் மற்றும் ராபி பருவங்கள்) 5862 விவசாயிகள் 5256.99 ஏக்கா் அளவிற்கு அறிவிக்கப்பட்ட தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு பதிவு செய்துள்ளனா்.

 

நடப்பாண்டில் (2020 – 21) காரிப் பருவத்தில் வாழை மற்றும் மஞ்சள் ஆகியவை பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

அரசு தோட்டக்கலைப் பண்ணை, புங்காக்கள் மற்றும் தோட்டங்கள்

நோக்கம்:

 1. தரமான மற்றும் இனத்தூய்மையான தோட்டக்கலை நடவுப் பொருட்களை உற்பத்தி செய்து விநியோகித்தல்.
 2. மாதிரி விளக்கப் பண்ணையாக செயல்படுதல்.

 

பண்ணைகள் மற்றும் புங்காக்களின் விவரம்:-

 

வ.

எண்

பண்ணையின்

பெயர்

அமைவிடம் வட்டாரம் நிறுவப்பட்ட

ஆண்டு

பரப்பு

(எக்டர்)

1. அரசு தோட்டக்லைப் பண்ணை புதூர் செக்கடி தண்டராம்பட்டு 2018 12.76
2. தோட்டக்கலைப் புங்கா அரசு கலைக் கல்லூரி எதிரில் திருவண்ணாமலை 2019 3.64
3. வட்டார அளவிலான

நாற்றங்கால்

கோவிலூர் ஜமுனாமரத்தூர் 2019 0.68
4. வட்டார அளவிலான

நாற்றங்கால்

முருகாபாடி போளுர் 2020 1.52
                                                                      மொத்தம் 18.60

 

அரசு தோட்டக்கலைப் பண்ணைளயில் தக்காளி, கத்தரி, மிளகாய் போன்ற குழித்தட்டு

நாற்றுக்கள் மற்றும் எலுமிச்சை, ப்ப்பாளி, முருங்கை, செண்டுமல்லி நாற்றுக்களும் மல்லிகை, ரோஜா வேர்ச்செடிகளும் மற்றும் பல்வேறு வகையான அழகுச் செடிகளும் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

 

வாசனை திரவியம் பிரித்தெடுக்கும் அலகு:-

 

நோக்கம்:- இஞ்சி புல், பால்மரோசா, லெமன் கிராஸ் மற்றும் புதினா போன்றவற்றிலிருந்து நறுமணத் திரவியம் பிரித்தெடுக்கும் அலகு வாடகை அடிப்படையில் விவசாயிகளுக்கு வழஙகுதல். ஜமுனாமரத்தூர் வ்ட்டாரத்தில் இஞ்சி புல் மற்றும் பால்மரோசா போன்ற நறுமணப் பயர்கள் பயிரிடப்படுகின்றன.

 

ஜமுனாமரத்தூர் வட்டாரத்தில் வட்டார அளவிலான நாற்றங்கால் பண்ணையில் உள்ளுர் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக வாசனை திரவியம் பிரித்தெடுக்கும் அலகு,                1-டன்/பிரிவு என்ற கொள்ளளவில் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து நிறுவப்பட்டு செயல்பட்டு வருகிறது.

 

 

 

பொது மற்றும் தனிநபர் விழாக்களில் செடிகள் பரிசளித்தல்:-

 

தமிழகத்தில் பிறந்த நாள் விழா, திருமண நாள் விழா, திருமணம், நிச்சயதார்த்தம், புதுமனை புகுவிழா, புதிய கடைகள் திறப்பு விழா மற்றும் இதர விழாக்களில் கலந்து கொள்ள வருகை தரும் விருந்தினர்களுக்கு செடிகள் பரிசுகளாக வழங்கப்படுகின்றன.  சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் நோக்கில் இதுபோன்ற செடிகள் பரிசுகளாக வழங்கப்படுகின்றன.  அவை நீண்ட நாட்கள் வளர்ந்து பிற்காலத்தில் சுற்றுப்புறச்சூழலுக்கு முக்கியமான பயன்பாடாக அமையும்.  மேலும் இதுபோன்ற விழாக்களில் மரக்கன்றுகள் பரிசளிக்கும்போது அளிப்பவா மற்றும் பெறுபவர் இருவருமே மிக மகிழ்ச்சியடைவார்கள். மேலும் மரக்கன்றுகள் வளர்ப்பில் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் அமையும். நமது அரசு தோட்டக்கலைப் பண்ணையின் மூலமாக தரமான அழகுச் செடிகள், மரக்கன்றுகள் மற்றும் இதர செடிக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விழாக்களின்போது விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

 

காய்கறிகள் விதை உற்பத்தி:- புதூர் செக்கடி அரசு தோட்டக்கலைப் பண்ணையில் கீழக்க்ண்ட உண்மைத் தன்மை வாய்ந்த (TFL) காய்கறி விதை உற்பத்தி செய்யப்படுகின்றன.  வெண்டை (Arka Anamica), கத்தரி (CO 2), கொத்தவரங்காய் (MDU 1),அவரை (CO (Gb) – 14), சின்ன வெங்காயம் CO (on) 5, அரைக் கீரை (CO 1), புடலங்காய் (CO 2), காராமணி (Pusa Komal ) ஆகியவை.

 

 

 

 

 

அலுவலக முகவரி:-

 

தோட்டக்கலை துணை இயக்குநர்,

தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அருகில்,

வேங்கிக்கால், திருவண்ணாமலை – 606   604

தொலைபேசி எண்:  04175- 233 354

 

மாவட்ட அலுவலாகளின் தொடர்பு முகவரி விவரங்கள்

 

வ.

எண்

பெயர்

திருவாளர்கள்

பதவி கைபேசி எண்
1. V.சிதம்பரம் தோட்டக்கலை துணை இயக்குநர் 7904585531
2. Pபாலகுமார் தோட்டக்கலை உதவி இயக்குநர் (நடவுப் பொருள்) 7373944451
3. R.கார்த்திக் தோட்டக்கலை அலுவலர் (தொழில் நுட்பம்-1) 9788609108

 

வட்டார அளவிலான அலுவலாகளின் தொடர்பு முகவரி விவரங்கள்

 

வ.

எண்

வட்டாரம் பெயர்

திருவாளர்கள்

பதவி கைபேசி எண்
1. திருவண்ணாமலை R.குமரவேல் தோட்டக்கலை உதவி இயக்குநர் 9600284443
2 Mஆனந்தி தோட்டக்கலை அலுவலர் 9786365709
3. துரிஞ்சாபுரம் A.அமல்சேவியோ பிரகாஷ் தோட்டக்கலை உதவி இயக்குநர் 9629305619
4. M.மதுப்பிரியா தோட்டக்கலை அலுவலர் 8825406560
5. கீழ்பென்னாத்தூர் M.கண்ணன் தோட்டக்கலை உதவி இயக்குநர் 9500383647
6. K.திவ்யா தோட்டக்கலை அலுவலர் 7639094344
7. செங்கம் C.பிரவீணா தோட்டக்கலை உதவி இயக்குநர் 8124748557
8. K.K.ஸ்ரீவிலாசினி தோட்டக்கலை அலுவலர் 9750742481
9. தண்டராம்பட்டு R.ரவிச்சந்திரன் தோட்டக்கலை உதவி இயக்குநர் 9486568311
10. M.பாலசுப்பிரமணியன் துணை தோட்டக்கலை அலுவலர் 9443576876
11. புதுப்பாளையம் M.திவ்யா தோட்டக்கலை அலுவலர் 8056474584
12. போளுர் S.சிவக்குமார் தோட்டக்கலை உதவி இயக்குநர் 6382291667
13. S.பிரியதர்ஷினி தோட்டக்கலை அலுவலர் 9677684504
14. கலசபாக்கம் B.லோகேஷ் தோட்டக்கலை உதவி இயக்குநர் 9003482139
15. R.அஸ்வினி தோட்டக்கலை அலுவலர் 7868059745
16. சேத்துப்பட்டு R.பாலாஜி தோட்டக்கலை உதவி இயக்குநர் 7667034777
17. P.ஜெயமணி தோட்டக்கலை அலுவலர் 8508970210
18. ஆரணி T.தமயந்தி தோட்டக்கலை உதவி இயக்குநர் 9443696846
19. மேற்கு ஆரணி R.கார்த்திக் தோட்டக்கலை உதவி இயக்குநர் 9003415482
20. வந்தவாசி R.P.வளர்மதி தோட்டக்கலை உதவி இயக்குநர் 8525047880
21. தெள்ளார் P.தெய்வசிகாமணி தோட்டக்கலை உதவி இயக்குநர் 9500818721
22. பெரணமல்லூர் S.ராஜஷ்கண்ண்ன் தோட்டக்கலை உதவி இயக்குநர் 7418653569
23. செய்யார் S.மோனிகா தோட்டக்கலை அலுவலர் 9150813165
24. அனக்காவூர் S.ச்சிகலா தோட்டக்கலை உதவி இயக்குநர் 9790935462
25. S.கலைச்செல்வன் தோட்டக்கலை அலுவலர் 8220887022
26. வெம்பாக்கம் U.தமிழீழம் தோட்டக்கலை உதவி இயக்குநர் 9597449755
27. E.பாண்டியன் துணை தோட்டக்கலை அலுவலர் 9159427523
28. ஜமுனாமரத்தூர் P.அன்பரசு தோட்டக்கலை உதவி இயக்குநர் 8608868741
29. M.அசோக் தோட்டக்கலை அலுவலர் 9445995132
30. அரசு தோட்டக்கலைப் பண்ணை,புதூர்செக்கடி G.விஜயகுமார் தோட்டக்கலை அலுவலர் 9976340962