டாக்டா். இராதாகிருஷ்ணன் விருது 2026
வெளியிடப்பட்ட தேதி : 16/09/2026
பள்ளிக்கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் ஆசிாியர்களில் சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியா்களுக்கு தமிழ்நாடு அரசு மூலம் ஆசிரியா் தினத்தன்று ஆண்டுதோறும் டாக்டா். இராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டு வருகிறது. 2026 ஆம் ஆண்டிற்கான டாக்டா். இராதாகிருஷ்ணன் விருது திருவண்ணாமலை மாவட்டத்தில் 13 ஆசிரியா்கள் தேர்வாகி விருது பெற்றனா். இவ்விருது பெற்ற ஆசிரியா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இன்று (10.09.2026) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவா் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப., அவா்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.