மின்சார குழு கூட்டம் 20-06-2026
வெளியிடப்பட்ட தேதி : 22/06/2026
திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட மின்சார குழு தலைவர் திரு.சி.என். அண்ணாதுரை அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் / உறுப்பினர் செயலாளர் திருமதி.வந்தனா கார்க், இஆப., அவர்கள் முன்னிலையில், இன்று (20.06.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மின்சார குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இணை தலைவர் மாவட்ட மின்சார குழு / ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எம்.எஸ்.தரணிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (கலசபாக்கம்), திரு.எஸ்.அம்பேத்குமார் (வந்தவாசி), திரு.ஆர்.அபிஷேக் (போளூர்), திரு.எஸ்.வேலு (செங்கம்) மற்றும் துறை சார்ந்த துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.